தென் ஆப்பிரிக்காவை 113 ரன்களி வீழ்த்தி செஞ்சூரியன் கோட்டையை கோலி படை கைப்பற்றியது
தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கரும் தெம்பா பவுமாவும் 5ம் நாள் ஆட்டத்தை பாசிட்டிவாக தொடங்கினர். இந்திய பவுலர்களும் சிலபல பவுண்டரி பந்துகளை இலவசமாகப் போட்டுக்கொடுத்தனர்.
அதிரடியாக ஆடி ஓவருக்கு 4 ரன்கள் வீதம் அடித்துக் கொண்டிருந்த டீன் எல்கரை அற்புதமான இன்ஸ்விங்கரில் எல்.பி. செய்தார் பும்ரா.
அதிரடியாக ஆடி ஓவருக்கு 4 ரன்கள் வீதம் அடித்துக் கொண்டிருந்த டீன் எல்கரை அற்புதமான இன்ஸ்விங்கரில் எல்.பி. செய்தார் பும்ரா.
21 ரன்களை அதிரடியாக எடுத்த குவிண்டன் டி காக் சிராஜ் பந்தில் பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார், டெஸ்ட்டிலிருந்து ஓய்வும் அறிவித்தார்.
வியான் முல்டருக்கு முகமது ஷமி மிக அருமையாக ஒரு பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து சற்றே வெளியே எடுத்தார் எட்ஜ் ஆகி பந்த் கையில் போய் உட்கார்ந்தது.
மார்க்கோ யான்சென் 13 ரன்களில் ஷமி வீசிய அதேபோன்ற உள்ளே வந்து சற்றே வெளியே எடுக்க எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆகி நடையைக்கட்டினார்.
கேகிசோ ரபாடா அஸ்வின் பந்தை ட்ரைவ் ஆடப்போய் பாயிண்டில் ஷமியிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். அடுத்த பந்தே அஸ்வின் லுங்கி இங்கிடியையும் காலி செய்ய தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் கோட்டை தகர்க்கப்பட்டது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 12 இந்தியாவுக்குக் கிடைத்தது.
முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடிய வைஸ் கேப்டன் தெம்பா பவுமா 2வது இன்னிங்ஸிலும் வீழ்த்த முடியாமல் நின்றார் 35 நாட் அவுட்.
இதற்கு முன்னால் 1992 முதல் இந்தியா தென் ஆப்பிரிக்கா வந்து சென்சூரியனில் ஆடியுள்ளது, ஆனால் அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், தோனி, ராகுல் திராவிட், என்று யாரும் தகர்க்க முடியாத சென்சூரியன் கோட்டையை கோலி படை தகர்த்தது.