சினிமா

துல்கர் சல்மான் அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட சூர்யா

49views

அண்மையில் நடிப்பில் மலையாளம், தமிழ், இந்தி,கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியான ‘குருப்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை புரிந்தது. இந்நிலையில் துல்கர் சல்மானின் அடுத்த பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ” படத்தை நடன இயக்குனர் இயக்குகிறார். இந்த படம் மூலமாக முதன்முறையாக இயக்குராக களமிறங்குகிறார் பிருந்தா. இந்தப்படத்தில் துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். துல்கர் சல்மானின் 33வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை – , நஸ்ரியா – பகத் பாசில், ராணா டகுபடி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

யாழன் எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் ஆர்ஜேவாக இந்தப்படத்தில் நடிக்கிறார் துல்கர். ’96’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ‘ஹே சினாமிகா’ படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடன இயக்குனர் பிருந்தாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ‘ஹே சினாமிகா’ படம் அடுத்தாண்டு பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!