தமிழகம்

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்! தமிழக அரசு அதிரடி

52views

புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது , துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார் . அதில் , புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு 11 வயது சிறுவர் மீது தவறுதலாக பாய்ந்தது .

நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து , அவர் உயிரிழந்தார் .

இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது . எனவே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் .

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா , ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது . அப்போது அரசு தரப்பில் , கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது . இனிவரும் காலங்களிலும் இந்த மையத்தில் துப்பாக்கி சுடும் நிகழ்வு நடைபெறாது .

போலீசாருக்கு சாதாரண பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டது . இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் , வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர் .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!