விளையாட்டு

தில்லி கேபிடல் அணியின் கேப்டன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

49views

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படப் போகிறார் என்கிற நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தோள்பட்டைக் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது முழுவதும் குணமாகியுள்ளார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் நடைபெற்ற உடற்தகுதிப் பரிசோதனையில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்ச்சியடைந்து ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார்.

தில்லி அணி, ஷ்ரேயஸ் தலைமையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இந்த வருடம் அந்த அணி ரிஷப் பந்த் தலைமையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அறுவைச் சிகிச்சை செய்ததால் ஐபிஎல் போட்டியின் முதல் பாதியைத் தவறவிட்ட ஷ்ரேயஸ் ஐயர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இதனால், தில்லி கேபிடல்ஸின் கேப்டனாக யார் செயல்படப்போகிறார் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தொடர்வார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!