இந்தியா

தில்லியில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜவுளிப் பொருள்களின் மீதான வரி குறையுமா?

60views

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் ஒரே வரியை அமல்படுத்தும்பொருட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.

இதன்படி பொருள்களுக்கு 5%, 12%, 18%, 24% என்ற வகைகளில் வரிவிகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில பொருள்களுக்கு வரிவிகிதம் கூட்டி குறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜிஎஸ்டி வரி முறையில் 12%, 18% ஆகிய இரண்டையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் அதுபோல ஜவுளிகளுக்கான வரி உயர்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில், ஜவுளி பொருள்களின் மீதான வரி 5% லிருந்து 12% ஆக உயர்த்தப்படுவதற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!