308
எனது பெயர் ரா. ஆறுமுகம், அரசு நடத்தும் போட்டித் தேர்விற்குப் படித்து வருகிறேன். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கடலாடித்தாங்கல் கிராமம் எனது சொந்த ஊராகும். எனது மனைவி பெயர் அ. சுசான்னா இல்டா, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், வி.பூதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து
வருகின்றார்.
என்னுடைய இரண்டு பிள்ளைகள் ஆ. ஆபிரகாம் ஜோஸ் (5 ஆம் வகுப்பு), ஆ. அருனிஷ் ஷேண்டோ (2ஆம் வகுப்பு) நவமால்
காப்பேரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் கொரோனா ஊரங்கு காலத்தில் மூன்று மாதங்களிலேயே திருக்குறளில் 1330 குறளையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றலைப் பெற்றனர். எனது மனவிை நாளொன்றுக்கு மூன்று அதிகாரங்கள் வீதம் எனது பிள்ளைகளுக்கு திருக்குறள் முழுமையாக கற்பித்தார். நானும்
எனது மகன்கள் படித்த குறளைக் கேட்பேன்.
VGP உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு. V. G. சந்தோசம் அவர்களுடன்…
எனது மகன்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் திருக்குறள் முழுமையாக கூறும் ஆற்றலைப் பெற்ற செய்தியை, புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திப் பிரிவுக்கு தெரிவித்தேன். அவர்கள் அதனை ஏற்று புதுவை தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பை நடத்தி எங்கள் பிள்ளைகளை பேட்டி எடுத்து புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புச் செய்தனர்.இன்னும் இந்தச் செய்தியை எவ்வாறு மேலே எடுத்துச் செல்லலாம் என யோசித்த போது தந்தி தொலைக்காட்சி நிருபர் ஒரு யோசனையைக்
கூறினார். பின்பு இதை உலகச் சாதனையாக மாற்றலாம் எனக் கூறி புதுவையில் இங்கும் Assist World Record அமைப்பு நிறுவனம்
Dr. ராஜேந்திரன் அவர்களின் தொலைப்பேசி எண்ணைக் கொடுத்தார். நாங்கள் அவரை நேரில் சென்று பார்த்தோம். அப்போது டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் 50 நிமிடத்திற்குள் திருக்குறள் முழுமையும் கூறுவதற்கு பயிற்சிக் கொடுங்கள் என்றார். அதன்படி எனது மனைவியும். நானும் செல்போனில் நேரத்தை அமைத்து பிள்ளைகளை தினமும் திருக்குறள் முழுவதையும் கேட்போம். அதன்பின் டாக்டர். திரு.ராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தோம். அவர் உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் V.G. சந்தோசம் ஐயா அவர்களிடம் அழைத்துச் சென்றார். சென்னையில் எங்கள் பிள்ளைகளை அவரும் சோதித்துப் பார்த்தார்கள். அதிலும் வெற்றி
பெறவே ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி சேப்பாக்கம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை வைக்கும் சாதனை நிகழ்ச்சியில் எங்கள் பிள்ளைகளான ஆ. ஆபிரகாம் ஜோஸ் 33.08 நிமிடத்திலும், ஆ. அருனிஷ் ஷேண்டோ 25.47 நிமிடங்களிலும் 1330 குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை நிகழ்த்தினர்.
உலகச் சாதனை நிகழ்த்திய எங்கள் பிள்ளைகளுக்கு மேடையிலேயே கலைமாமணி டாக்டர் V.G. சந்தோசம் ஐயா அவர்கள்ரூபாய் ஒரு லட்சம் பரிசுத்தொகையை அறிவித்து வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S. மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டார். எங்கள் பிள்ளைகள் செய்த சாதனையைப் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினார்கள்.
மாண்புமிகு.தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர். செஞ்சி. K. S. மஸ்தான் அவர்கள் வாழ்த்திய காட்சி.
Assist World Record அமைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட மேனாள் குடியரசுத்
தலைவர் Dr. APJ. அப்துல்கலாமின் பேரன் உயர்திரு. ஷேக்சலீம் எங்கள் பிள்ளைகளைப் பாராட்டி வாழ்த்தினார்.
மேனாள் குடியரசுத்தலைவர் Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் பேரன் உயர்திரு. ஷேக் சலிம் அவர்கள் எங்கள் பிள்ளைகளை பாராட்டிய போது எடுத்த படம்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உயர்திரு. த. உயதயச்சந்திரன் அவர்களை சென்னை தலைமை
செயலகத்தில் சந்தித்த போது அவரும் எங்கள் பிள்ளைகளை பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உயர்திரு. த. உதயச்சந்திரன் IAS அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு. ந. ரங்கசாமி அவர்களும் எங்கள் பிள்ளைகளைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.
புதுவை மாநில முதல்வர். மாண்புமிகு. திரு. ந. ரங்கசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது…
பார்போற்றும் அளவிற்கும எங்கள் பிள்ளைகள் வளர உங்கள் எல்லாருடைய வாழ்த்தினை எதிபார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ரா.ஆறுமுகம்
மிக்க நன்றி திரு மதிப்பிற்குரிய நாகா அவர்களுக்கு