திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் அதிமுக நிர்வாகிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவி வழங்க வேண்டும், பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம், பொங்கல் பரிசுத்தொகைஅறிவிக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அதிமுகஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாக ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.
சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராயபுரம், வள்ளுவர் கோட்டம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 5 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள்மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராயபுரம், வள்ளுவர் கோட்டம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.