திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. தகவல் வெளியிட்ட புவியியல் ஆராய்ச்சி மையம்..!!
77
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கதினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் பவிஸ்பே நகரிலிருந்து 26 கி.மீ தொலைவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் பூமிக்கடியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.