ஸ்டாக்ஹோம்:கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் 4ம் தேதி முதல் துறை ரீதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டது.தான்சானியாவின் ஸான்ஸிபார் என்ற இடத்தில் 1948ல் பிறந்த அப்துல் ரசாக், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உள்ளார். இவரது ‘பாரடைஸ்’ நாவல், 1994ம் ஆண்டு ‘புக்கர்’ பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது.வளைகுடா நாடுகளில் அகதிகள் பிரச்னை, காலனி ஆதிக்கம் குறித்து இவர் சமீபத்தில் எழுதிய புத்தகத்திற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
85views
You Might Also Like
துபாயில் நடந்த ரத்ததான முகாம்
துபாய் : 22-டிசம்பர்-2024 அன்று துபாய் அல் ஜதாஃப் பகுதியில் அமைந்துள்ள துபாய் சுகாதார ஆணைய இரத்த தான மையத்தில் கிரீன் குளோப் (Green Globe) மற்றும்...
துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா : வி ஜி சந்தோஷத்துக்கு ‘உலக திருக்குறள் தூதுவர் விருது’ தமிழ் பணியை பாராட்டி வழங்கப்பட்டது.
துபாய் : செப்டம்பர் 30, முத்தமிழ் சங்கம் சார்பில் விஜிபி குழும தலைவரும் உலக தமிழ் சங்கத்தின் தலைவருமான வி ஜி சந்தோஷத்துக்கு அவரது தமிழ் பணியை...
78 வது சுதந்திர தின நிகழ்ச்சி
துபாய் ஆகஸ்ட் 17 : அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை நடத்திய இந்திய தேசிய 78 ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காணொளி நிகழ்ச்சி இன்று...
சர்வதேச பொறியாளர் அமைப்பின் மூத்த உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற துபாய் தமிழக பேராசிரியர்
துபாய் : இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் (IEEE), மனித குலத்தின் நலனுக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப தொழில்முறை அமைப்பாகும்....
சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக விழா
சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக நிகழ்வு, 20.95.2024 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் லாவண்டர் ஹோட்டல்...