சினிமா

தளபதி 67ல் யாரெல்லாம் நடிக்கிறார்கள்?.எப்போது ரிலீஸ்?.பரபரட் அப்டேட் இதோ

60views
விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிவிட்டார். விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி அவர் அடுத்து இயக்கும் புதிய படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் விஜயின் 67வது திரைப்படமாகும். பாலிவுட்டுக்கு சஞ்சய்தத் எனவும், மலையாளத்திற்கு பிரித்திவிராஜ் என இப்படத்தில் 6 வில்லன்கள் நடிப்பதாகவும், விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 3வது வாரம் அல்லது டிசம்பர் 1ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாகவும், சஞ்சய் தத், பிருத்திவிராஜ் ஆகியோரை தொடர்ந்து நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆயூத பூஜைக்கு இப்படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
விஜய் தற்போது வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!