சினிமா

தமிழ்நாட்டில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகும் வலிமை

52views

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடித்துள்ள வலிமை படம் நாளை(பிப்., 24) வெளியாகிறது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. உலகம் முழுக்க 4000 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வலிமை அதிகளவில் திரையிடப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் “முதல்முறையாக ‘வலிமை’-க்கு அதிக திரையரங்குகள். தமிழ்நாட்டில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது” என தெரிவித்துள்ளார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!