செய்திகள்விளையாட்டு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2021.. இன்று பிளே ஆப் சுற்று ஆரம்பம் .!!!!!

61views

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.

அதில் ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளியுடன் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளியுடன் 3-வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளியுடன் 4வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.’பிளேஆப்’ சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!