தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்: தமிழக அரசு புதிய உத்தரவு

78views

தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை நிகழ்ச்சிகளில் ஒலிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!