நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
857views
You Might Also Like
‘படைப்பை எழுதியபின் படைப்பாளன் அதைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்த அவசியமில்லை’ – ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் இயக்குநர் சரண் அனுபவப் பகிர்வு
சென்னை சென்னையில் மாதந்தோறும் நிகழ்ந்துவரும் ‘ஹைக்கூ முற்றம்’ 8-ஆவது நிகழ்வு கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் மகாகவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் கடந்த பிப்ரவரி 25 அன்று...
காட்பாடி அருகே புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த அதிமுக விசுவாசி
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டி.கே.முரளி, தீவிர எம்.ஜி.ஆர்.விசுவாசியான முரளி, எம்.ஜி.ஆருக்கு தனி கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி தொண்டான் துளசி...
காட்பாடி அருகே கார்ணாம்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.69.52 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலி காட்சியில் அமைச்சர் துரைமுருகன் நாட்டினார். நிகழ்ச்சியில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...




