தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்

47views

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே இனி, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருவாரூர் அருகே இளவங்கார்குடியில் புதிய ரேஷன் கடையினை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொதுமக்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்லணையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்றும், அதே சமயம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!