விளையாட்டு

டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா… இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

64views

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் 3 வகை போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தவர் விராட்கோலி. இதில் கடந்த ஆண்டு இறுதியில் அமீகரத்தில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடருக்கு பின் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக விராட்கோலி அறிவித்தார். அதன்படி டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், விராட்கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து டி20 அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் போட்டிக்காக கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி அதிரடியாக நீக்கப்பட்டு ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியும் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதில் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் விராட்கோலி இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர் இந்த சர்ச்சை தற்போதும் நீண்டு வருகிறனது.

இந்நிலையில், சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியின் ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கு துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அந்த தொடரில் ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில் ஒருநாள் போட்டிக்கான அணியை ராகுல் வழி நடத்தினார். ஆனால் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில். திடீரென விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

விராட்கோலியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.இந்த பதவிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா உள்ளிட்ட சில வீரர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி தற்போது டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரோகி்த் சர்மா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பதவியேற்ற முதல் தொடரை வெற்றிகராமாக முடித்துள்ளார். இ்ந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்து இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு பும்ரா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கே), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எஸ்.பரத், ஆர். ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார். முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது. ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (து.கே).

டி20 தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கே), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், தீபக் ஹூடா, ஆர் ஜடேஜா, ஒய் சாஹல், ஆர் பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது யாதவ்.சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், ஜஸ்பிரித் பும்ரா (து.கே), அவேஷ் கான்

இதில் டி20 தொடருக்கான இந்திய அணியின் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு .இஷான் கிஷான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற்றுள்ளர். இதில் டெஸட் அணியில் ரஹானே மற்றும் புஜாரா நீக்கப்பட்டு, பிரியங் பஞ்சால் மற்றும் கே.எஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!