இந்தியா

டெக் மஹிந்த்ரா வசமாகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட்

46views

இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டெக் மஹிந்த்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

ஆட்டோ மொபைல், விருந்தோம்பல், நிதி நிர்வாகம், தொழில் பூங்கா என பல்வேறு தொழில்களில் மஹிந்த்ரா குழுமம் முன்னணியில் உள்ளது. டெக் மஹிந்த்ரா, தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்டிவ்ஸ் கனெக்ட் என்னும் நிறுவனத்தை, 466 கோடி ரூபாய் முதலீட்டில், நூறு சதவீத பங்குகளையும் கையகப்படுத்தியுள்ளது.

ஆக்டிவ்ஸ் கனெக்ட் நிறுவனம், வீட்டிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் டெக் மஹிந்த்ரா, வாடிக்கையாளர் சேவை பிரிவிலும், சர்வதேச வர்த்தகத்திலும், இனி பல மொழிகளில், பல வழியில் வாடிக்கையாளர் சேவையை அளிக்க முடியும். 2018-ல் துவக்கப்பட்ட ஆக்டிவ்ஸ் கனெக்ட்டில் ஆயிரத்து 750 பணியாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!