இந்தியா

டாவோஸ் மாநாடு: இன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை

40views

‘ஆன்லைன்’ வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ‘ஒமைக்ரான்’ வகை தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருவதால் இந்த ஆண்டு திட்டமிட்ட தேதிகளிலும் மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.எனவே அதே தேதியில் ‘ஆன்லைன்’ வாயிலாக மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இன்று துவங்கி ஐந்து நாட்களுக்கு டாவோஸ் உலக பொருளாதார மன்ற மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.அதன் பின், ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ நாளை உரையாற்றுகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!