சினிமா

ஜோக்கர் இயக்குனர் ராஜூ முருகனின் படத்தில் இணையும் கார்த்தி, விஜய் சேதுபதி

61views

குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகனின் புதிய படத்தை ட்ரீம் வாரியர் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கலாம் என்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது.

ராஜூமுருகன் அடிப்படையில் சிவப்பு சிந்தனைக்கு சொந்தக்காரர். லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். முதல் படத்திலேயே வித்தியாசமான இயக்குனர் என்ற பார்வையை மக்களிடையே ஏற்படுத்தினார். அவரது ஜோக்கர் குறிப்பிடத்தகுந்த திரைப்படம். இதுவரை மூன்று படங்கள் இயக்கியிருக்கும் இவர் அடுத்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார், எதிர் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது.

இதற்கு முன் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்போது கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். கார்த்திக்கு வில்லனாக அவர் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன் கார்த்தி நடித்த சுசீந்திரனின், நான் மகான் அல்ல திரைப்படத்தில் சிறிய வேடம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்திருப்பார்.

இன்று அவர் சிறிய நடிகர் அல்ல. பல கோடிகள் பிசினஸ் உள்ள வளர்ந்த நடிகர். அவரை வைத்து படம் பண்ண அனைத்து மொழி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கின்றனர். இப்படி ஒரு சூழலில் அவர் கார்த்திக்கு வில்லனாக நடிப்பாரா என்பதை கதையும், கதாபாத்திரமும், தயாரிப்பாளர் அளிக்கப் போகும் சம்பளமும்தான் முடிவு செய்யும். விரைவில் இது பற்றிய ஆச்சரியமான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!