உலகம்

ஜெர்மனியின் புதிய பிரதமராக ஒலாஃப் ஸ்கால்ஸ் பதவியேற்பு

50views

ஜெர்மனியின் புதிய பிரதமராக ஒலாஃப் ஸ்கால்ஸ் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மெர்க்கலின் 16 ஆண்டுகால பிரதமர் பதவி முடிவுக்கு வந்துள்ளது.

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ரகசிய வாக்கெடுப்பு கீழவையில் நடந்தது. மொத்தம் உள்ள 707 வாக்குகளில், 395 பேர், ஒலாஃப் ஸ்கால்ஸூக்கு ஆதரவாக வாக்களித்து அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஸ்கால்ஸ் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஸ்கால்ஸின் இடது சோஷியல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலம் பெற்றது. எனினும் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துவந்தது. தற்போது பேச்சுவார்த்தைகள் முடிந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மெர்க்ல் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் ஸ்கால்ஸ் நிதியமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!