106
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான சைமன் பைல்ஸ் “ஆல்-அரவுன்ட்’ பிரிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தப் பிரிவில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனாவார். தனது உளவியல் நலனில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அணிகள் பிரிவு இறுதிச்சுற்றிலும் ஒரேயொரு முயற்சியுடன் பைல்ஸ் விலகியிருந்தார். தற்போது ஆல்-அரவுன்ட் பிரிவில் சைமன் பைல்ஸின் இடத்தில் ஜேட் கேரி சேர்க்கப்பட்டுள்ளார்.