ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியானதை அடுத்து அந்த பகுதிக்கு வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது ஜம்மு காஷ்மீர்.
ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி.. கார்கில், லடாக் தலைவர்களுடன் ஜுலை 1ல் மீட்டிங்
இந்த நிலையில் இன்று காலையில் ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் குண்டு வெடித்த சத்தம் கேட்டது. அந்த இடத்திற்கு உடனடியாக வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர்
குண்டு வெடித்த இடத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5 கிலோ வெடி பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.