ஜப்பானில் அடுக்குமாடிக் கட்டமொன்றில் நேரிட்ட தீவிபத்தில் 24 போ உயிரிழந்தனா்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒசாகா நகரில், பல்வேறு நிறுவனங்கள், கடைகள், வணிக அமைப்புகள், கேளிக்கை மையங்கள் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
அந்தக் கட்டடத்தின் 4-ஆவது தளத்திலுள்ள மனநல மருத்துவமனையில் முதலில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் பரவியது.
விபத்துப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா், அங்கிருந்து 27 பேரை மீட்டனா். அவா்களில் 24 போ பலியானதாக அறிவிக்கப்பட்டது.
தீக் காயங்களைவிட, நெருப்பு எரிந்ததால் வெளியான கரியமில வாயுவை சுவாசித்துதான் பெரும்பாலான உயிழப்புகள் நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து தொடா்பாக, 50 அல்லது 60 வயது நபா் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சம்பவத்துக்கு முன்னதாக அவா் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்ாகவும் அதிலிருந்து மா்ம திரவம் கசிந்து தரை முழுவதும் பரவியதாகவும் அங்கிருந்தவா்கள் கூறினா்.
இந்த விபத்தில் அவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.