ஜப்பானின் அடுத்த பிரதமராக அமைச்சா் டாரோ கோனோவுக்கு (58) கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
ஜப்பான் பிரதமராக உள்ள யோஷிஹிடே சுகா பிரதமா் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அண்மையில் தெரிவித்தாா். இதையடுத்து, அடுத்த பிரதமராக யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது பற்றி அந்நாட்டின் கொய்டோ செய்தி நிறுவனம் தொலைபேசி மூலம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. 1,071 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதில் 32 சதவீதம் போ அமைச்சா் டாரோ கோனோவுக்கும், 27 சதவீதம் போ பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சா் ஷிகெரு இஷிபாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனா். வெளியுறவு முன்னாள் அமைச்சா் ஃபுமியோ கிஷிடாவுக்கு 19 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
மேலும் இரு செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளும் இதே முன்னிலையைத் தெரிவித்துள்ளன. தற்போது கேபினட் அமைச்சராக உள்ள டாரோ கோனோ தடுப்பூசிகள் துறையையும் கவனித்து வருகிறாா்.
ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவா்தான் பிரதமராகத் தோந்தெடுக்கப்படுவாா். அந்த வகையில், செப். 29-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சித் தோதலில் இவா்கள் போட்டியிடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.