செய்திகள்தொழில்நுட்பம்

செல்போனை பார்த்தபடியே நடப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட மூன்றாம் கண்

102views

சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தாலும், ஆட்கள் வந்தாலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் மெய்மறந்து செல்போன்களுடன் நடப்பவர்களை உஷார் படுத்தும் கருவி ஒன்றை தென்கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

ரோபாட்டிக் கண் என கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு மூன்றாம் கண் என Paeng Min-wook என்ற அந்த 28 வயது வடிவமைப்பாளர் பெயரிட்டுள்ளார்.

செல்போனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது, சென்சர் உதவியுடன் இந்த மூன்றாவது கண் திறக்கும். 2 மீட்டருக்குள் எதிரே வாகனமோ வேறு ஆட்களோ, மோதும் வகையில் வந்தால் பீப் பீப் ஒலி எழுப்பி இந்த மூன்றாவது கண் எச்சரித்து ஆபத்தில் இருந்து தப்ப உதவும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!