இந்தியா

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுரை: 2வது அலை இன்னும் முடியவில்லை

43views

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் பண்டிகைகளை பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் மக்கள் கொண்டாடும்படி ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பண்டிகை காலமாகும். இந்த கால கட்டத்தில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல பண்டிகைகள் தொடர்ந்து கொண்டாடாப்படும். நாட்டில் கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை. எனவே, மக்கள் பாதுக்காப்பாகவும் விழிப்புணர்வுடனும் இந்த பண்டிகைகளை கொண்டாட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனையொட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது:

கொரோனா 2ம் அலையின் மத்திய பகுதியில் தற்போது இருக்கிறோம். 2வது அலை இன்னும் முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகையின் முடிவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை பார்க்கிறோம். எனவே, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் பண்டிகைகளை நடைமுறையில் இருக்கும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் கொண்டாட ேவண்டும். நாட்டில் உள்ள 41 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 58.4 சதவீதம் கேரளாவில் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!