நிகழ்வு

சென்னை பெருநகர காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து நடத்திய “உலக மகளிர் நாள் விழா”

462views
சென்னை பெருநகர காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து உலக மகளிர் நாள் விழாவை சென்னையில் சிறப்பாக கொண்டாடியது!
இதில் மேனாள் காவல்துறை அதிகாரி திலகவதி இ கா ப அவர்கள் பாராட்டப்பட, தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

பெருநகர சென்னை காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து நடத்திய உலக மகளிர் நாள் விழா! சென்னையில் இருக்கும் இராயபுரம் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகரில் அரசு சிறுவர் பள்ளியில் திரு பிரவீன்குமார் பரதவர், முன்னிலையில் சிறப்பாக நடத்தியது. இதில் தமிழ் நாடு காவல்துறையின் முன்னாள் அதிகாரி திலகவதி இ கா ப அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க.. அவருடன் அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் திரு உக்கிரபாண்டியன், எண்2காவல் ஆய்வாளர் திரு ஜெயகிருட்டிணன் மற்றும் அத்துறை சார்ந்த காவல் பணியினர் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் இராசலட்சுமிகார்த்திகேயன் வரவேற்புரை ஆற்ற, திருமதி ரம்யா சுகுமார் தலைமையேற்க மிகச் சிறப்பாக தொடங்கியது. இதில் மேனாள் காவல் துறை முதன்மை அதிகாரியாக இருந்த திருமதி திலகவதி அம்மையார் பேசும் போது மகளிர் நலன் பற்றிய கருத்துகளை வழங்கி மகளிர் முன்னேற்றம் அடைய வேண்டிய வழிகளை சொல்லி உரையாற்றினார். அதில், சேவாபாலம் தலைவர் இருளப்பன், சூசைமோகன், செந்தில்குமார், பா.தங்கம் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதன் பின்னர் அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் உலக மகளிர் நாள் சிறப்புகளையும் அதனை தமிழர்கள் நாம் எப்படியெல்லாம் நாடு, மொழி, கடல், ஆறு, தெய்வங்கள் என எவற்றில் எல்லாம் தாய்மையை முன்னிருத்தி வழிபட்டு வருகிறோம் என்பதையும் தற்காலத்தில் தமிழினத் தோன்றல்களாய் தோன்றிய கமலாஆரிசு, இந்திராநூயி போன்ற தமிழ்ப் பெண்கள் பலரும் உலக நாடுகளிலும் இந்தியாவிலும் உயர் பதவிகளிலும் அறிவாற்றல், கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் என பலவற்றிலும் சிறந்து விளங்குவதையும் முன்மொழிந்து வாழ்த்துரை வழங்கினார்.
திருமதி திலகவதி அவர்கள்.. தமிழ்நாட்டு மகளிரில் காவல்துறை அதிகாராயாக முதன்முதலாக உயர்ந்தவர். அவர் முதன்மை நிலைக்கு வந்ததற்கு பெண் என்பதால்.. எந்த தடையும் இல்லாமையும் தனித் திறமையுமே காரணம் என்பதையும் பேசி வாழ்துரை வழங்கினார்.
இதில் காயதிரி, புவணேசுவரி, கலா, ஆர் உசா, ஜெயக்கொடி, இராசலட்சுமி, சிறீதேவி, சகர்பானு, போன்றோரின்
தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெண்கள் வந்து கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியை எழுத்தாளர். கடலார் வேலாயுதம் அவர்கள் தொகுத்து வழங்க.. கே புருசோத்தமன் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தார்.
திருமதி பி சங்கீதா நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!