ஐபிஎல் 14ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக 4 அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது. இரண்டாவது அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறி உள்ளது.
நேற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியலின் படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, 10 போட்டிகளில் வெற்றி என 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 9 போட்டிகளில் வெற்றி என 18 புள்ளிகளுடன் இரண்டாவது உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 8 போட்டிகளில் வெற்றி என 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 தோல்வி, 6 போட்டிகளில் வெற்றி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 தோல்வி, 5 போட்டிகளில் வெற்றி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 தோல்வி, 5 போட்டிகளில் வெற்றி என 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 தோல்வி, 5 போட்டிகளில் வெற்றி என 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 10 தோல்வி, 2 போட்டிகளில் வெற்றி என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.