தமிழகம்

சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்த வாக்கு பதிவு

41views

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் சென்னையில் தான் மிகக்குறைந்த அளவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதுவரை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்தை தாண்டியே வாக்குப்பதிவாகியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது.

ஆனால், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகக்குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது. இதன்மூலம், சென்னை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது மிக குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!