உலகம்

சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா

46views

சூடானில் ஜனநாயக அரசுக்கு ஆதரவான போராட்டம் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா செய்துள்ளார்.வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சூடான் நாட்டில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஒமர் அல் – பஷீர்; இவர் 1989ல் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.

30 ஆண்டு களாக சூடான் அதிபராக அசைக்க முடியாத சர்வாதி காரியாக விளங்கினார். இந்நிலையில் 2019ல் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராணுவத்தின் ஒத்துழைப்புடன் சூடான் பிரதமராக அப்துல்லா ஹம்டோக் பதவியேற் றார்.

இந்நிலையில் 2021 அக்டோபரில் மீண்டும் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இரும்புக் கரம் கொண்டு ராணுவம் அடக்க முற்பட்டது. இதில் ஏராளமானோர் பலியாகினர்.

உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்த ராணுவம் 2021 நவ., 21ல் மீண்டும் அப்துல்லா ஹம்டோக்கை பிரதமர் பதவியில் அமர்த்தியது. இது தொடர்பாக ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. எனினும் சூடானில் முழுமையான ஜனநாயக அரசு அமைய வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வந்தன.அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் பதவியை அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் ‘டிவி’யில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். அரசியல் பிரச்னைகளை சுமுகமாக தீர்க்க எடுத்த முயற்சியில் தோல்வி அடைந்ததால், புதியவருக்கு வழி விட்டு பதவி விலகுவதாக அப்துல்லா ஹம்டோக் தெரிவித்துஉள்ளார். பிரச்னைகளை உடனே தீர்க்காவிட்டால், சூடான் மிகப் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!