165
அவரவர் வேலைகளை ஓட்டமும், நடையுமாக செய்துகொண்டிருக்கும் ஓரிடத்தில் வேடிக்கை பார்ப்பவனாக மட்டும் இருப்பவனுக்கு, குற்றவுணர்வு சுரண்டுதலைப் போல குறுகுறுப்பை ஏற்படுத்தும்தான்.
தவிர்க்கமுடியாத காரணங்களில் சுறுசுறுப்பாளர்கள் முன்சென்று வெறுமனே நிற்கும் நிலையில்,அங்கு நிலவும் கண்டுகொள்ளப்படாத் தன்மை அவனின் இருப்பை இன்னும் கொஞ்சம் இறக்கிக் காட்டும் .
வலியச்சென்று தன் அடையாளத்தைக் காட்ட நிச்சயமாக ஏதோவொன்றில் அவன் சிறப்பு உறுதியாகியிருக்க வேண்டும் முன்னமே.கைவசம் எதுவும் இல்லாதவன் கைகெட்டி நிற்பதை இந்த உலகு ஒருநாளும் ஏற்றுக்கொள்வதில்லை.
தனக்கான வாழ்வினை பிறரிய வாழ்த்தலைத்தான் பேரென்றும் ,புகழென்றும்,அதன்பின் தலைவனென்றும் பெயர் சூட்டி பரவவிட்டிருக்கக்கூடும் பழைய மனிதர்கள்.
-
கனகா பாலன்
add a comment