இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 04

209views
“நான்தான் எல்லாமே,என்னால்தான் முடியும்,அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது “இப்படியான வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் பளுவினை சுமந்து திரிய சிலருக்கு ரொம்பவே பிடித்திருக்கும்.
இதைச் சாக்காக வைத்து “எதையும் இழுத்துப்போட்டு செய்ய ஒருவர் இருக்கும் தைரியத்தில் அலுங்காமல் குலுங்காமல் சிலர் தம் வாழ்வினை அழகாக்கிக் கொள்வர்.
விருப்பப்பட்டு பாரம் சுமப்பவர்கள் பிறரின் பார்வைக்கு ஏமாளி, ஆனால் சம்பந்தப்பட்டோருக்கோ “தான் தானென்று தன்னைத்தானே கொண்டாடிக்கொள்ளும் போதை..”
நேர்த்தியும், ஒழுங்கும் தன்னால்தான் இயலுமென்ற மிதப்பு மனம், பிறர் செய்கைகளில் எப்போதும் குறைகளை மட்டுமே காணும் திருப்தியின்மைக்கு அருகாமையிலிருப்பது.
நாளடைவில் இம்மாதிரியானவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நொச்சல்.
இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிவிடச் செய்யும் முயற்சிகளை எப்போதும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ,இதுவரை பலன் பெற்றுக் கொண்டவர்களின் உள்மனம்.
தான் ஒதுக்கப்படுகிறோம் என்பதைப் புரியத் தொடங்கும் அந்த நிமிடங்கள் எத்தனை வருத்தத்திற்குரியது இல்லையா…
பிறருக்காக என்றோ?  தன்னை முன்னிருத்தும் பொருட்டோ? உடல்வலிமை காலத்தில் ஓடி ஓடிச் செய்ததெல்லாம் மதிப்பின்றி போக, என்னதான் மிச்சமிருக்கப்போகிறது கழிந்துபோன உழைப்பைத் தவிர…
கவன ஈர்ப்பென்பது தனித் தன்மையால் கிடைக்கப்படவேண்டுமே தவிர, தேவையற்ற மூக்கு நுழைப்பு, உடைபட்டே தீருமென்பது உண்மைதானோ..?
  • கனகா பாலன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!