202
பரிசுத்தம் என்றுதான் ஈர்க்கப்படுகிறோம்.
ஆனால் கண்ணுக்குத் தெரியாத பறக்கும் தூசிகள் படிவதற்கான இடமும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது என்பதை மெல்லமாகத் தானே புரிகிறது.
யாரோ அல்லது ஏதோ ஒன்றின் மீதான விருப்பங்கள் பளிச்சென இருக்கும் வானத்திலிருந்து காக்காவுக்கும், நரிக்குமான கல்யாணத்துக்குப் பெய்யும் மழையாகக் கொள்ளும் உணர்வு.
திடுமென வந்து உள்ளத்தை நனைத்துச் செல்லும் .
வான் நோக்கி அதிசயித்து குனிந்து ஈரமண்ணில் கால் துலாவி மீண்டும் மீண்டும் உறுதி செய்து உவகை கொள்ளும் நேரத்தை ஒத்தது.
உறவு தொடர்ந்த காலங்களில் எந்த இடத்திலும் கருப்புப் புள்ளிகள் அவசியத்துக்கு வருவதில்லை.
ஆனால் கரையான்கள் அரித்து குவிக்கும் குப்பைகளாக சேர்த்துவைக்கத் காத்திருக்கிறது ஒன்றிரெண்டு விரிசல் எழும் நேரங்கள்.
சின்னாபின்னமாய் சிதறிப் போகும், அந்த உறவுகள் முழுவதுமாக தொலைத்துவிடுகின்றன எறும்பின் சேகரிப்பை ஒத்த புரிதல்களை.
இறுதியில் எதையுமே எடுத்துச் செல்லப் போவதில்லை என்று தெரிந்தேதான் கொரிக்க கிடைத்த நாட்களை குதறி வைத்துக் கொண்டிருக்கிறோமோ…?
-
கனகா பாலன்
add a comment