உலகம்உலகம்செய்திகள்

சீன இராணுவத்துடன் தொடர்புடைய 59 நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு தடை!

67views

சீன ராணுவத்தோடு தொடர்புடைய 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதித்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் உச்சம் தொட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 48 சீன நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த நிறுவனங்கள் சீன ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான சீன நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளில் இருந்து வெளியேற்றப்பட்டன. இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை 59 சீன நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தி ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி சீனாவின் ஏரோ எஞ்சின் கார்ப்பரேசன், ஏரோசன் கார்ப்பரேசன், ஃபுஜியான், ஹவாய் உள்ளிட்ட நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெள்ளை மளிகை அறிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்த போது கொரோனாவை சீன வைரஸ் என்றும் சீனாவே திட்டமிட்டு உருவாக்கிய வைரஸ் என்றும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டினார்.

தற்போது ஜோ பைடனும் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டறிய அமெரிக்க உளவுப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். சீனா உடனான உறவில் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளையே ஜோ பைடனும் பின்பற்றுவதால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜோ பைடன் அரசின் முடிவானது சர்வதேச பொருளாதார விதிமுறைகளை மீறும் செயல் என்று சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!