உலகம்உலகம்செய்திகள்

சீனப் ‘பனிப்பாறைகளில்’ நடந்த ஆராய்ச்சி…! 15 ஆயிரம் வருஷமா ‘அது’ அழியாம இருந்துருக்கு…! – ஆய்வில் வெளிவந்த ‘அதிர’ வைக்கும் தகவல்…!

84views

இப்போதெல்லாம் தினம் ஒரு வைரஸ் என்ற கணக்கில் புதிது புதிதாக வைரஸ்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை திபெத்திய பனிப்பாறைகளில் இருந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சீனப் பகுதியில் உள்ள கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

மேற்குப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாகவே பனிப்பாறைக்குள் வைரஸ்கள் நீண்ட காலமாக இருக்கும் என்பதால் இத்தனை ஆண்டுகளாகியும் வைரஸ்கள் அழியாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதோடு, ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானியும், நுண்ணுயிரியல் பேராசிரியருமான ஜி பிங் ஜாங் பனிஅடுக்குகளில் தூசுக்கள், வாயுக்கள் மற்றும் வைரஸ்கள் புதைந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடுபட்டுள்ள அறிக்கையில், சோதனை மூலம் கண்டறியப்பட்ட வைரஸ்களில் 4 ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 33 வைரஸ்களுக்கான மரபணு குறியீடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைரஸ்களின் பரிணாம மாற்றம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!