1999ஆம் ஆண்டு ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானார் த்ரிஷா. விஐபி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்து முடித்துள்ளார். கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
சிம்ரன் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. இதனை நண்பர்கள், ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது: விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள் என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார், அதனால் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். நான் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி, என் வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.