தமிழகம்

சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் கோவையில் பிப்.27-ல் பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம்

61views

கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் 10-வது ஆண்டாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி கோவையில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் கூறியது: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள பறவைகளை கணக்கெடுக்க வேண்டும். அதன்பின், https://ebird.org/home என்ற இணையதளத்தில்அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதோடு, neasacon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குழு புகைப்படம், தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். குழுவாக 3 முதல் 4 பேர் இணைந்து இதில் பங்கேற்கலாம். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/saconbirdrace2022என்ற இணைப்பில் வரும் 26-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் பங்கேற்கும் குழுவின் தலைவராக செயல்படுபவர், தாங்கள் கணக்கெடுக்கும் பகுதியின் இருப்பிடத்தை வாட்ஸ்அப்-ல் பதிவு செய்ய வேண்டும்.

கணக்கெடுப்பு தினத்தன்று இரவு 7 மணிக்கு ஜூம் செயலி வழியாக பங்கேற்பார்கள் கூட்டம் நடைபெறும். அதில் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம். சிறப்பாக செயல்படும் குழுவினருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு 7708797346 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!