இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை, தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ந் தேதி தொடங்கியது. இதில்,இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்து கின்றன. 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இவ்விழா இன்றுடன் முடிகிறது.
சிரஞ்சீவியை தொடர்ந்து சிவ ஷங்கர் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் தந்த தனுஷ் சிறந்த நடிகர் மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும், பல மொழி படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் திரையிடப்படும் அந்த வகையில் , நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அசுரன் படம் திரையிடப்பட்டது இதில், சிறப்பாக நடித்த தனுஷுக்கு சிறந்த (ஆண்) நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றுள்ள நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதால்,தனுஷின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தனுஷூக்கு வாழ்ந்து கூறி வருகின்றனர்.