இந்தியா

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டை – சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

43views

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம், தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு, குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற அமைப்பின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, ‘தேரா சச்சா அமைப்பில் பெண் சிஷ்யைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங், தனது கடிதம் மூலம் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால் ரஞ்சித்தை சிங்கை கொல்ல குர்மீத் திட்டமிட்டுள்ளார்” எனக் குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹிம் சிங், கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகியோர் குற்றவாளிகள் என சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றவாளிகளுக்கான தண்டனையை அறிவித்துள்ளது. அதன்படி குற்றவாளிகள் ஐவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு 31 லட்சமும், சப்திலுக்கு 1.5 லட்சமும், ஜஸ்பிர் சிங் மற்றும் கிருஷ்ணனுக்கு தலா 1.25 லட்சமும், அவ்தார் சிங்கிற்கு 75 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையில் 50 சதவீதம் கொல்லப்பட்ட ரஞ்சித் சிங்கின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!