தமிழகம்

சர்ச்சைக்குரிய பதிவு: யூடியூபர் மாரிதாஸ் கைது

70views

குன்னுார் அருகே ெஹலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த சம்பவத்தில் தி.மு.க.வை விமர்சித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜ. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் 40 மதுரையில் கைது செய்யப்பட்டார்.மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரிய காலனியில் வசிக்கும் மாரிதாஸ் அவ்வப் போது தி.மு.க. அரசை விமர்சித்து டிவிட்டரிலும் யூடியூபிலும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

இதுதொடர்பாக மாரிதாஸ் டிவிட்டரில் தி.மு.க.ஆட்சி குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இது பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்பதால் மதுரை போலீசார் தாங்களாகவே முன்வந்து மாரிதாஸ் மீது சைபர் கிரைம் சட்டப்பிரிவு 153 ஏ 505(2)ன்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 153 ஏ பிரிவு என்பது மதம் இன குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் நல்லிணக்கத்திற்கு எதிரானது. 505(2) பிரிவு என்பது ராணுவவீரர்கள் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துதல் பகைமையை ஏற்படுத்துதல் இப்பிரிவுகளின்கீழ் நேற்று மதியம் மாரிதாசை கைது செய்ய அவரது வீட்டிற்கு உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது பா.ஜ. நகர் தலைவர் சரவணன் தலைமையிலான கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்யும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!