உலகம்

‘கோவாக்சின்’ போட்டவங்க ‘எங்க நாட்டுக்கு’ வர்றதுல எந்த தடையும் இல்ல…! ‘கோரன்டைனும் பண்ண மாட்டோம்…’ – ‘அதிரடி’யாக அறிவித்த நாடு…!

91views

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு வெளிநாடு செல்ல பல்வேறு தடைகள் இருந்த நிலையில், தற்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டது. அதன் வரிசையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் போன்ற தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

இதில் கோவிஷீல்ட், ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பல நாடுகள் பயன்படுத்தும் காரணத்தால் இவ்வகை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பல வெளிநாடுகளில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதோடு, கோவாக்சின் செலுத்திய இந்தியர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியா அரசு கொரோனா தடுப்பூசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில், கொரோனா பரவல் காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த தளர்வுகளின் படி இந்தியாவின், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீனாவின் தடுப்பூசி செலுத்திய பயணிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி, ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அதோடு, பயணம் தொடங்கும் முன் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!