தமிழகம்

கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்: எச்.ராஜா

76views

”தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்” என்று பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்துதான் ருத்ரதாண்டவம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா.கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!