உலகம்

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

46views

கொரோனா பரவல் என்பது போலி தொற்று என்று பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது .

ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்காலிகமாகத் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் மக்களுடன் இனி கொரோனாவும் வாழும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது கொரோனா தொற்றை விட வீரியமான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த ஃபாதர் செர்ஜி என்பவர் கொரோனா போலி என கூறியுள்ளார். இவர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலத்திலிருந்தே, தவறான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் தேவாலயத்திற்கு வரும் மக்களிடமும் கொரோனா குறித்து தவறான கருத்துகளைக் கூறினார்.

இதனால் இவருக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், இவர் கொரோனா ஒரு போலியான நோய் என்று தொடர்ந்து கூறிவந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!