கேரளாவில் இடதுசாரி முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பதிவியேற்க உள்ளார்.
மொத்தம் உள்ள 140 கொகுதிகளில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பொதுவாக கேரளாவில் சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக தொடர்ந்து 2ஆவது முறையாக இடதுசாரி முன்னணி கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் 40 ஆண்டுகளில் சிபிஎம் தொடர் வெற்றி பெற்றுள்ளது. தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொரோனா காலத்தில் பினராயி விஜயன் சிறப்பாக செயல்பட்டதாக ஐநா சபை வரை பேசப்பட்டது.
இந்நிலையில் அதை அங்கீகரிக்கும் விதமாக கேரள மக்கள் பினராயி விஜயனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதே போல் கொரோனா நெருக்கடிக்கு இடையே சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட ஷைலஜா 60,963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.