இந்தியாசெய்திகள்

கேரளாவில் உள்ள 3 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா!

71views

கேரளாவில் உள்ள மூன்று பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பரவி இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் உருமாறிக்கொண்டே புதிய வகையாக மாறிக் கொண்டு வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் அந்த வைரஸுக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் வகை என கொரோனா உருமாறியதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா வைரஸால் கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மூன்று பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!