விளையாட்டு

‘கூகுளில்’ அதிகம் தேடப்பட்டவர்களில் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு முதலிடம்

67views

நாறு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட வென்றதில்லை என்ற வருத்தம் 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு இருந்தது.

இந்த வருத்ததை போக்கியவர் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.ஹிந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் உல்லாச கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யான் மூன்று வாரத்துக்கு பின் ‘ஜாமினில்’ வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் கூகுள் தேடுதளத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் முதலிடத்தை நீரஜ் சோப்ராவும் இரண்டாவது இடத்தை ஆர்யான் கானும் பிடித்துள்ளனர்.பஞ்சாபி பாடகி ஷெஹ்நாஜ் கில்லும் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரது காதலன் சித்தார்த் சுக்லா சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார். ஹிந்தி நடிகையின் கணவரும் ஆபாச படங்களை தயாரித்ததாக கூறி கைது செய்யப்பட்டவருமான ராஜ் குந்தரா நடிகை கத்ரீனா கைபின் கணவரும் ஹிந்தி நடிகருமான விக்கி கவுசல் ஆகியோரும் அதிகம் பேர் தேடியவர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!