குண்டு மனிதர்களை வாடகைக்கு விடுவாங்களா.? 1 மணி நேரத்திற்கு 1,300 ரூபாய்.. வினோத சேவையை தொடங்கிய ஜப்பானியர்..!!
ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு அனுப்பும் தொழிலைத் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானியர்கள் பலவிதமான காரணங்களால் மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். அதுபோல் தற்போது ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழிலை தொடங்கியுள்ளார். ஜப்பானில் Mr.Bliss என்பவர் “Debucari”என்னும் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளார்.
இந்த சேவையின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ 100 கிலோவுக்கும் மேலிருக்கும் குண்டு மனிதர்களை 1 மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,300 ரூபாய் கொடுத்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று இந்த சேவை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளரான Mr.Bliss கூறியதாவது, குண்டு மனிதர்களை நீங்கள் பார்க்கும் போது தாம் நன்றாக உள்ளோம் என்று உணர்வதற்காகவோ அல்லது டயட் பிளான் போன்ற விளம்பரங்களை எடுக்க வேண்டுமானால் கட்டாயமாக மாடல் தேவைப்படும்.
அவ்வாறு தேவைப்படும் மாடல்களுக்காகவோ எங்களுடைய இந்த புதிய சேவையை அணுகி நீங்கள் குண்டு மனிதர்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்றுள்ளார். மேலும் Mr.Bliss பேசியதாவது, குண்டு மனிதர்களை அவமதிக்கும் வகையில் “Debucari” நிறுவனம் தொடங்கப்படவில்லை என்றும், இந்த நிறுவனத்தை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.