சினிமா

கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின்.. அசத்தலான பாடல் இன்று வெளியீடு

83views

இந்தியாவில் பிரபல நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் இன்று வெளியான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பாட்டா மற்றும் தமிழில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி நடிப்பில் அடுத்தடுத்து தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில், சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தெலுங்கில் இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் குட் லக் சகி. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள குட்லக் சகி படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. குட்லக் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் டிசம்பர் 10-ஆம் வெளிவர இருக்கும் தேதி குட்லக் சகி திரைப்படத்திலிருந்து கலகலப்பான புதிய பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!