152
20.2.2022 ஒலிபரப்பான “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் ஆக சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை
கால மாற்றம்
மாற்றம் எமது மானிடத்
தத்துவம்
ஏற்றம் காட்டினார்
எம்கவி யரசர்
வேற்றார் வருகை
வீணாய் விதைத்த
மாற்றம் ஏனோ மனத்தை
வாட்டுமே
அப்பா அம்மா தாத்தா
பாட்டி
எப்போதும் உறவுகள்
என்றும் விருந்தினர்
தப்பாமல் நிறைந்த
தரமிகு நாளெங்கே
முப்பாலில் சொன்ன
முழுஇன்ப மெங்கே
அத்தை என்ற அழகான
உறவே
முத்தாய் சிலருக்கே
முதிர்ந்த வாய்ப்பு
சித்தப்பா அன்பும் சிலரே
பெற்றிட
மொத்த உறவும்
முழுநிலவும் கனவே
பள்ளி முடிந்ததும்
பையை வீசியே
துள்ளி விளையாடும்
தூய உள்ளம்
அள்ளி எடுத்தே அன்பாய்
கொஞ்ச
வள்ளலாய் அக்கா
தங்கை அரிதே
இயற்கை யோடே
இயைந்த வாழ்வை
செயற்கை விஞ்சிட
செய்வ தறியாதே
வயலும் வரப்பும்
வரிசை கல்நட
மயங்கும் இன்று மாந்த
ரினமே
ஏரிகள் எல்லாம் இல்லங்
களாகிட
வாரி செல்ல வழியிலா
வெள்ளம்
வீதியில் பெருக விடுதி
தேடி
பீதியில் அலையும்
பெருங்குடி மக்கள்
ஓட்டு கேட்கையில்
ஓங்கிய புன்னகை
போட்டு முடித்ததும்
புறம்காணா நன்னடை
வேட்டுச் சத்தம் வெற்றி
சொல்லிட
போட்டவன் உள்ளம்
பொறுமை காக்குமே
பண்பாட்டு விழுமியம்
பழமை என்ற
எண்ணத்தில் நடக்கும்
இளையோர் நெஞ்சில்
கண்ணான மரபை
கனிவாய்ச் சொல்லி
மண்ணின் மணத்தை
மலர வைப்போமே
-
குடந்தை மாலாமதிவாணன்
add a comment