உலகம்

காபூல் இரட்டை குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. பெரும் சோகம்.!!!

120views

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே சற்றுமுன் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 90 ஆகி அதிகரித்துள்ளதாகவும், இதில் 13 பேர் அமெரிக்க படையினர் ஆவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஐ. எஸ்.ஐ. எஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!